மலையாண்டி கோயில்
Malaiyaandi Temple
மூலவர் பெயர்
மலையாண்டி
தல மரம்
அரசமரம்
பூசைக்காலம்
வாரம் இரு நாட்கள் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
முளைப்பாரி, பால் குடம் போன்ற சடங்குகள். மஞ்சு விரட்டும் நடைபெறுகிறது. பங்குனி மாதம் சல்லிக்கட்டு நடைபெறும் பொழுது மலைமேல் உள்ள முருகர் தேரில் இம்மலையைச் சுற்றி வருவார்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
முன்னொரு காலத்தில் ஔவையார் இக்கோவிலிருக்கும் மலை அடிவாரத்தில் வந்து தங்கியதாகச் செல்லப்படுகிறது. முருகன் இந்த மலைக்கு வந்து தன் திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அதனால் இந்த கோயிலை ’மலையாண்டி முருகன் கோயில்’ என்கின்றனர். இந்த வழிபாட்டுத்தளம் சுமார் 1500 வருடம் பழைமையானதாக இப்பகுதி வாழ் மக்களால் கருதப்படுகிறது. மேலும் இவ்விடத்தில் 1000 வருடங்கள் பழமையான நாவல் மரம் இருப்பதாகவும் செல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
மலை அடிவாரத்தில் காணப்படும் ஒரு திறந்தவெளி கோயில் அமைப்பு
கூடுதல் விவரங்கள்
மலையாண்டி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் இந்த திறந்தவெளி வழிபாட்டுத்தளம் அமைந்துள்ளது. இவ்விடத்தில் ஒரு பீடத்தின் மேல் பல, உலோகத்தினால் ஆன, வேல் ஆயுதங்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அருகில் உள்ள, படிகளுடன் கூடிய, பீடத்தில் ஒற்றை வேலாயுதம் நடப்பட்டுள்ளது. இந்த மலையின் முகப்பு மற்றும் மலையைச் சுற்றி உள்ள பெரிய பாறைகளில் தெய்வங்களின் உருவங்கள் சமீப காலத்தில் வரையப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. முருகன் சிவபெருமானுக்கு 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை உபதேசிக்கும் காட்சி, கைலாயத்தில் சிவன், பார்வதி, பிள்ளையார் மற்றும் முருகன் அமர்ந்திருக்கும் காட்சி மற்றும் ஆஞ்சநேயர் சஞ்சீவினி மலையை ஏந்தி வரும் காட்சி ஆகியவை இப்பாறைகளில் வரையப்பட்டுள்ளன.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கருங்காலக்குடி தொல்லியல் இடம்
செல்லும் வழி
மேலூர் முதல் சிங்கம்புணரி செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files