Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

காமாட்சி அம்மன் கோயில்

Kamatchi Amman temple

பிற தெய்வத்தின் பெயர்கள்

விநாயகர், அய்யனார்


அமைவிடம்

அரிட்டாபட்டிக்கும் வள்ளாலபட்டிக்கும் இடையில் அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

காமாட்சி அம்மாள்


ஊர்

A.வெள்ளாளப்பட்டி

மாவட்டம்

மதுரை

தல மரம்
வேப்பமரம்
கோயில் குளம்/ஆறு
குளத்தை ஒட்டி கோயில் அமைந்துள்ளது
பூசைக்காலம்
வாரம் இரு நாட்கள் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகாசி 30 ஆம் தேதி திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
களரி ஆட்டம் மற்றும் பால் குடம்
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
பல காலங்களுக்கு முன், அக்கா தங்கைகள் நான்கு பேர் இவ்வூருக்கு வந்துள்ளனர். அவர்களே பின்பு இவ்வூரைக் காக்கும் காவல் தெய்வமான, ’காமாட்சி அம்மனானர்’ என்ற செவிவழிச் செய்தி இப்பகுதி மக்களிடையே உள்ளது. இந்த காமட்சி அம்மன் அரிட்டாபட்டி மற்றும் வள்ளாலபட்டி மக்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறது. இந்த அம்மன் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுபவள் என்ற நம்பிக்கை இவ்வூர் மக்களிடையே உள்ளது.
கோயில் அமைப்பு
விமானம், கருவறை மற்றும் நான்கு தூண்கள் கொண்ட முகமண்டப அமைப்பையுடைய, அண்மைக்காலக் கோயில். இங்குள்ள இறையுருவச் சிற்பத்தின் அடிப்படையில் இது சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்துள்ளது எனக் கருதக்கூடும்.
கூடுதல் விவரங்கள்
முன் மண்டப முகப்பு பகுதியில் அம்மன் மற்றும் பூதகணங்களின் சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் முதன்மைக் கடவுளான காமாட்சி சிலை, கருப்புசாமி சிலை மற்றும் விநாயகர் சிலை உள்ளது. கோயிலின் வளாகத்தில் நாகர், கை வணங்கி நிற்கும் உருவம் மற்றும் கால்கள் போன்ற உருவ அமைப்புடைய சுடுமண் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை கோயிலுக்கு கொடுக்கப்பட்ட காணிக்கையாக இருக்கலாம்.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் மேலூர் செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை

மீடியா கோப்புகள் இல்லை

No media Files