ஆஞ்சநேயர் கோயில்
Anjaneya Temple
பிற தெய்வத்தின் பெயர்கள்
இராமர், சீதை, லட்சுமணர், பஞ்சமுக ஆஞ்சநேயர், ஜெய்வீர ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர் மற்றும் பக்த ஆஞ்சநேயர்
தலத்தின் சிறப்பு
இக்கோயில் அழகர் கோயில் தேவஸ்தானத்தின் உப கோயில் ஆகும். இங்கு வந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
மூலவர் பெயர்
ஆஞ்சநேயர், இராமர், சீதா, லெட்சுமணர்
ஊர்
மேலூர்
மாவட்டம்
மதுரை
தல மரம்
அரச மரம்
பூசைக்காலம்
இக்கோயிலில் தினமும் ஒரு கால பூசை காலையில் நடத்தப்படுகின்றது.
திருவிழாக்கள் விவரங்கள்
சனிக்கிழமை மற்றும் பிற முக்கிய நாட்களில் சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
சனிபகவானின் தாக்கம் குறைய வெற்றிலை மாலை, ராகு கேதுவின் தாக்கம் குறைய வடமாலை மற்றும் அமாவாசையன்று வெண்ணை அணிவித்தல் போன்ற வழிபாட்டு முறைகள் இங்கு உள்ளன. மேலும் திருமஞ்சன காப்பு அணிவித்தல் நடைபெறுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
ஆஞ்சநேயரின் விஸ்வரூப தரிசனத்தில் அவருக்கு ஐந்து முகங்கள் உள்ளன. அவை நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர், லக்ஷ்மி வராக சுவாமி மற்றும் ஹயக்ரீவர் சுவாமி ஆகும் . இவ்வாறு ஐந்து முகங்களுடன் காட்சியளிக்கும் இவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று பெயர்.
கோயில் அமைப்பு
கருவறை, முன் மண்டபம் மற்றும் பிற சந்நிதிகள் உள்ளன.
சுருக்கம்
இக்கோயிலில் முதன்மை தெய்வங்களாக சீதா, இராமர், லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளனர். இந்த நான்கு தெய்வங்களின் சிற்பமும் கருவறையில் காணப்படுகிறது. மேலும் இக்கோயிலில் பக்த ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், ஜெயவீர ஆஞ்சநேயர் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய நாலு ஆஞ்சநேயர்கள் உள்ளனர். எனவே இக்கோயில் ஆஞ்சநேயர் கோயில் என்ற அழைக்கப்படுகிறது. கருவறைக்கு வெளியில் இடது பக்கம் வீர ஆஞ்சநேயர் சிலை காணப்படுகிறது. இதைத்தவிர இக்கோயில் வளாகத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் நரசிம்மர் சன்னதிகளும் வைக்கப்பட்டுள்ளன. கோயிலில் காணப்படும் பஞ்சமுக ஆஞ்சநேயர்- நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர், லக்ஷ்மி வராக சுவாமி மற்றும் ஹயக்ரீவர் சுவாமி ஆகிய ஐந்து முகங்களை கொண்டு காட்சியளிக்கிறார்.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சிங்கம்மாள் கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் மேலூர்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files