Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

சக்தி மாரியம்மன் கோயில்

Shakthi Mariamman Temple

பிற தெய்வத்தின் பெயர்கள்

விநாயகர்


தலத்தின் சிறப்பு

இந்த அம்மன் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுபவள் என்ற நம்பிக்கை இவ்வூர் மக்களிடையே உள்ளது.


மூலவர் பெயர்

மாரியம்மன்


ஊர்

மேலூர்

மாவட்டம்

மதுரை

தல மரம்
வேப்பமரம்
பூசைக்காலம்
தினந்தோறும் கோயில் திறக்கப்பட்டு பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
பங்குனி மாத இறுதியில் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பால்குடம் எடுத்தல், விளக்கு பூஜை, முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தல், புஷ்ப ரத ஊர்வலம் ஆகியவை நடைபெறும். சிறப்பு பூஜைக் காலங்களில் சுமார் 20,000 பேர்களுக்கு இக்கோயிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1960 களில் கட்டப்பட்டது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
முருகர் மற்றும் விநாயகர் சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
சுமார் 60 வருடங்களுக்கு முன்பு ஒரு வயதான பெண் இவ்விடத்தில் ஒரு சூலாயுதத்தை வைத்துள்ளார். அதுவே காலப்போக்கில் சக்தி மாரியம்மனாக வழிபடப்படுகிறது. அச்சூலமிருந்த இடத்தில் தற்போது அம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு
ஒற்றை அடுக்கு விமானம் மற்றும் கருவறை அமைப்பைக் கொண்ட சிறிய கோவிலாகும். கருவறைக்கு வெளியில் இடது பக்கம் விநாயகரும் வலது பக்கம் முருகனும் சிறிய சன்னதியில் காணப்படுகின்றனர்.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் கருவறையில் மூலவரான சக்தி மாரியம்மன் ஒரு பீடத்தின் மேல் அமர்ந்துள்ளார். இவருக்கு நான்கு கரங்கள் உள்ளன. இவர் தனது வலது முன் கரத்தில் வாள் பிடித்துள்ளார். அம்மனுக்கு அருகில் பலிபீடமும் சூலமும் வைக்கப்பட்டுள்ளன.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
காஞ்சிவனம் கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் மேலூர்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை

மீடியா கோப்புகள் இல்லை

No media Files