உச்சி மாகாளியம்மன் கோயில்
Uchchi Makali Amman Temple
மூலவர் பெயர்
உச்சி மாகாளியம்மன்
தல மரம்
வேப்பமரம்
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி மாதம் முதல் தேதியில் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பால் குடம், தீச்சட்டி, முளைப்பாரி, மூன்று கரகம் எடுத்து வருதல்.
பொங்கல் வைத்தல். ராகுகாலம் பத்து முதல் பன்னிரண்டு விளக்கு பூஜை ஆகியவை நடைபெறும்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
சிம்மம், கருப்பண்ணசாமி, விநாயகர் மற்றும் முருகர்.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் கருவறை, அர்த்தமண்டபம் மற்றும் முக மண்டப அமைப்பு காணப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் முக மண்டபத்தில் கல்லால் ஆன சூலம், பலிபீடம், சிம்மம், கருப்பண்ணசாமி மற்றும் நாகர் சிலைகள் காணப்படுகின்றன. அர்த்தமண்டப பகுதியில் விநாயகர் மற்றும் முருகன் சிலைகள் காணப்படுகின்றன. மூலவரான மாகாளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இவருக்கு நான்கு கரங்கள் உள்ளன. இவர் தனது வலது முன் கரத்தில் ஆயுதம் ஏந்தியுள்ளார். இக்கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 150 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மேலூர் சிங்கம்மாள் கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் மேலூர்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files