சின்னையன் கோயில்
Chinnaiyan Temple
தல மரம்
வன்னிமரம்
பூசைக்காலம்
வாரம் ஒருமுறை பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
முளைப்பாரி,பால் குடம்
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
கோயிலின் நுழைவாயில் அருகில் இரண்டு பெரிய சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டு சிற்பங்களிலும் குதிரையின் மேல் கருப்புசாமி அமர்ந்துள்ளார். இக்குதிரைகளின் முன்னங்கால்களை பூதகணங்கள் தாங்கியுள்ளன. குதிரையின் காலுக்கு கீழ் பக்தர்கள் நின்றவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.
தல வரலாறு / கதைகள்
பல காலங்களுக்கு முன் இவ்வூரைச் சேர்ந்த ஒருவரும் அவரது மகனும் இரவில் கண்மாய் காவலுக்காக சென்றுள்ளனர். அப்பொழுது அவர்கள் பரணியின் மேல் உறங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த மகனை நல்ல பாம்பு தீண்டியது. பொழுது விடிந்ததும் இறந்து கிடந்த தன் மகனைப் பார்த்த அந்தத் தந்தையும் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். ஊர்க்காவலின் பொழுது இறந்த இவ்விருவரும் பின்னர் அவ்வூரைக் காக்கும் தெய்வங்களாக மாறினார் என்ற இந்த செவிவழிச் செய்தி கோடாங்கி அடிக்கும் பொழுது சாமியாடிய நபரால் சொல்லப்பட்டதாக இவ்வூர் பெரியவர் கூறுகிறார்.
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் எட்டு தூண்கள் கொண்ட முகமண்டப அமைப்பையுடைய அண்மைக்காலக் கோயில் கட்டிடம்
கூடுதல் விவரங்கள்
ஓலை குடிசையில் வைத்து பலகாலமாக வழிபடப்பட்ட இந்த சாமி சிலையை பின்னர் வேறு ஒரு இடத்தில் கோயில் கட்டி அங்கு நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வூரில் திருவிழாவின் போது காயம் கருப்பட்டி வைத்து, பள்ளையம் போடுவதாகவும் அதில் பல்லி ஏறி இறங்கி சென்ற பின்னரே ஊர் மக்கள் அனைவரும் உணவு உண்பதாகவும் கூறப்படுகிறது.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
குறிப்புகள்
அக்கிராம முதியவர் திரு. சுப்பிரமணியன் கூறுகிறார்.
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மேலூர் காஞ்சிவனம் கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் திருச்சி நெடுஞ்சாலை செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files