கரடி கருப்பசாமி கோயில்
Karadi Karuppasamy temple
பூசைக்காலம்
வாரம் இரு நாட்கள் பூஜை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இங்கு கிடாய் வெட்டும் பழக்கம் உள்ளது
காலம்/ ஆட்சியர்
சுமார் 250 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
கருவறையின் இடது பக்கத்தில் காவல் தெய்வத்தின் சிற்பம் உள்ளது.
தல வரலாறு / கதைகள்
பல காலங்களுக்கு முன், இவ்வூர் காவல் தெய்வமான கரடி கருப்பசாமி, கிழக்கு திசையில் கள்ளம்பட்டி என்ற ஊரிலிருந்து இங்கு வந்ததாக இவ்வூர் மக்களால் கூறப்படுகிறது. மேலும் திருமலைசாமி, கருப்பசாமி மற்றும் சின்னம்மசாமி ஆகியோர் அனைவரும் புதுக்கோட்டையிலிருந்து இங்கு வந்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி உள்ளது.
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் முகமண்டப அமைப்பை கொண்ட சிறிய கோயில்.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் கருவறையின் இடது பக்கம் காணப்படும் காவல் தெய்வத்தின் சிற்பம் தன் இடது காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்திருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் தனது வலது கையில் அரிவாளும் இடது கையில் மரத்தடி (கர்லாகட்டை) போன்ற ஆயுதத்தையும் ஏந்தியுள்ளார். முறுக்கு மீசையுடன் காட்சியளிக்கும் இந்த காவல் தெய்வம் பூ மாலை மற்றும் பிற ஆபரணங்களையும் அணிந்துள்ளார். இக்கோயிலுக்கென்று மூன்று பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
குறிப்புகள்
அவ்வூரில் உள்ள 85 வயது முதியவர்.
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அழகர் கோயில்
செல்லும் வழி
மேலூர் முதல் அழகர்கோயில் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files