Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

கருப்பு சுவாமி கோயில்

Karuppusamy Temple

கோயிலின் வேறு பெயர்

காவல் தெய்வம், ஊர் காவலன்


மூலவர் பெயர்

கருப்பு


பூசைக்காலம்

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கோயில் திறந்திருக்கும். குறிப்பிட்ட பூசைக்காலம் கிடையாது.


ஊர்

A.வெள்ளாளப்பட்டி

மாவட்டம்

மதுரை

திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
விரதம் இருத்தல் மற்றும் கிடாய் வெட்டும் பழக்கம் உள்ளது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
மூலவரான கருப்புசாமியின் சிலை உள்ளது. பீடத்தின் மேல் நிற்கும் கருப்புசாமி, முறுக்கு மீசையுடன் கையில் அரிவாள் மற்றும் கதை பிடித்தபடி நின்றுள்ளார். இவர் கை, கால் மற்றும் கழுத்தில் அணிகலன்கள் அணிந்துள்ளார்.
தல வரலாறு / கதைகள்
பல காலங்களுக்கு முன், இவ்வூர் காவல் தெய்வமான கருப்பண்ணசாமி முளையூரில் இருந்து இவ்வூருக்கு வந்ததாக இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இந்த கருப்பண்ணசாமிக்கு முத்துக்கருப்பன், பெரிய கருப்பன் மற்றும் சிறிய கருப்பன் என்ற சகோதரர்கள் இருந்ததாகவும், அவர்களுக்குள் சிறிய கருப்பன் இவர்கள் அனைவருக்கும் காவல் தெய்வமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு
ஓட்டு கூரையுடைய திறந்த மண்டபம் போன்ற அமைப்பில் இந்த கருப்புசாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் ’குதிரை எடுப்பு திருவிழா’ முக்கியமான விழாவாகக் கருதப்படுகிறது. இப்பகுதியிலுள்ள அனைத்து கோயில்களிலும் குதிரை எடுப்பு நடைபெறுவதற்கு முன்பு இக்கோயில் ’குதிரை எடுப்பு திருவிழா’ நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. திருவிழாவின் போது உச்சி கிடாய் வெட்டுதல் என்ற நிகழ்வு நடுசாமத்தில் நடைபெறும். அச்சமயத்தில் 'சாமியாடி’ என்று அழைக்கப்படும் நபர் மட்டுமே அங்கிருப்பார். பலியிடப்பட்ட இந்த கிடாய் உப்பு போடாமல் சோற்றுடன் வேக வைக்கப்படுகிறது. பின்பு இது மதுபானங்களுடன் கருப்பு சாமிக்கு படையலாக படைக்கப்படுகிறது. இதுவே 'எரிசோறு' எனப்படுகிறது.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அழகர் கோயில்
செல்லும் வழி
மேலூர் முதல் அழகர் கோயில் செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை

மீடியா கோப்புகள் இல்லை

No media Files