நாகம்மாள் கோயில்
Nagammal Temple
பூசைக்காலம்
தினந்தோறும் பூஜை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமையில் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பால் குடம், வேல் குத்து, முளைப்பாரி, ஆகிய வழிபாடுகள் நடைபெறும்.
கல்வெட்டு / செப்பேடு
இங்கு காணப்படும் கல்வெட்டு சித்தார்த்தி வருடம் வைகாசி மாதம் 22 ஆம் தேதி (5.6.1979), மேலூரில் உள்ள மில் ரோட்டில் இக்கோயில் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கின்றது.
சிற்பங்கள்
நாகம்மாள் மற்றும் யானைகளின் கற்சிற்பங்களும், விமானப் பகுதியில் பூதகணங்கள் சிங்கங்கள் மற்றும் நாகம்மாள் சுதை சிற்பங்களும் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
விமானத்துடன் கூடிய கருவறை அமைப்பைக் கொண்ட சிறிய கோயில்.
கூடுதல் விவரங்கள்
படிக்கட்டுகளுடன் கூடிய கருவறை அமைப்பில், ஒரு பீடத்தின் மேல் நாகம்மாள் சிலை வைக்கப்பட்டுள்ளது. நாகம்மாள் தன் கைகளை அபயம் மற்றும் வரத முத்திரைகளில் வைத்துள்ளார். நாகம்மாள் மகுடம் மற்றும் ஆபரணங்கள் அணிந்துள்ளார். இவர் தலையின் மேல் ஐந்து தலை நாகம் காட்டப்பட்டுள்ளது. கருவறையில் நான்கு நாகம்மாள் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையின் மேல் பகுதியில் சுதை சிற்பங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சிறிய விமானம் காணப்படுகிறது. நுழைவாயிலின் இருபுறமும் யானைகளின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயில் கருவறையின் பின்பக்கம் இன்றும் அந்த பழமையான அரசமரம் உள்ளது. அவ்வரச மரத்தின் கீழ் நாகர் கற்சிற்பங்கள் காணப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
சுமார் 100 வருடங்களாக நாகம்மாள் என்று அழைக்கப்படும் இந்த அம்மன், அரச மரத்தடியில் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்துள்ளது. பொது ஆண்டு 1979 ஆம் வருடத்தில் தான், இன்று காணப்படும் தற்காலக் கோயில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மேலூர் சிங்கம்மாள் கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் மேலூர்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files