பெருமாள் கோயில்
Perumal Temple
கல்வெட்டு / செப்பேடு
இங்குள்ள பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு ஒன்றில், மருதூர் பெருமாள் கோயில் திருமுற்றம் , திருநந்தவனம் , தீர்த்தக்குளம் ஆகியவை பனங்காடியான இராசேந்திர சோழச் சதுர்வேதிமங்கலத்து சபையாரிடமிருந்து பெற்று அனுபவித்து வரப்பெற்றது, என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கண்ணாழ்வார் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் இறைவர்க்கு திருப்படிமாற்றுள்ளிட்ட செலவினங்களுக்காக நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறது.
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் முன் மண்டப அமைப்பு உள்ளது.
சுருக்கம்
இந்தப் பெருமாள் கோயிலின் கருவறை மற்றும் முன் மண்டப அமைப்புகள் ஓரளவு பாதிப்புடன் காட்சியளிக்கின்றன. கோயில் அருகில் ஒரு கற்தொட்டியும் காணப்படுகின்றது. கோயிலின் வெளிப்புற சுவற்றில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றைத் தெளிவாக படிக்க முடியவில்லை.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் பிற்காலப் பாண்டியராட்சிக் காலத்தில், பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டப் பெருமாள் கோயில் ஆகும். பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டில், பனங்காடியான இராசேந்திர சோழச் சதுர்வேதி மங்கலத்தின் மேல்பிடாகையாக இவ்வூர் இருந்துள்ளது. இந்த பெருமாள் கோயில் ’கண்ணாழ்வார் கோயில்’ என்றழைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் திருமுற்றம், திருநந்தவனம், தீர்த்தக்குளம் ஆகியவை இராசேந்திர சோழர் சதுர்வேதிமங்கலத்து சபையாரிடமிருந்து பெற்று அனுபவிக்கப்பட்டு வந்த தகவலையும், பிற்காலப் பாண்டியர் காலத்தில் கண்ணாழ்வார் கோயிலுக்கு இறையிலியாக நிலங்கள் வழங்கப்பட்டச் செய்தியையும், இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. மேலும் இக்கோயில் இறைவனுக்கு திருப்படிமாற்று உள்ளிட்ட செலவினங்களுக்காக தானமளிக்கப்பட்ட ஊர்கள் ’திருநாராயணநல்லூர்’ என்னும் பெயரால் தேவதான இறையிலியாக வழங்கப்பட்டதையும் இக்கல்வெட்டு கூறுகிறது. பெருங்காரைக்குடி என்றழைக்கப்பட்ட குடிதாங்கி நல்லூர் என்ற ஊரும், கேசவனேரிகுளம் என்ற குளமும் இவ்வூர்க் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
குறிப்புகள்
மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம்- 147
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
ஆமூர் சிவன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மருதூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files