அய்யம்பொழில் ஈசுவரர் கோயில்
Ayyampozhil Eshwarar Temple
மூலவர் பெயர்
அய்யம்பொழில் ஈசுவரர்
ஆகமம்
காரண ஆகமம்
பூசைக்காலம்
மூன்று வேளை பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை, ஆடி, தை மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் ஐந்து தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:
1.பொது ஆண்டு 1219ல் வெட்டப்பட்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில், தென்பறப்பு நாட்டு நல்லணி ஆமூர் சுந்தரத்தோளன் திருப்பூவனமுடையானான செம்பியன் பல்வரையன் உச்சி சந்திக்கும் சந்தியாதீபத் திருவிளக்கிற்கும் தானம் அளித்ததைத் தெரிவிக்கிறது. இதற்காக எட்டுப் பழங்காசுகள் அளிக்கப்பட்டுள்ளன, என்ற தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
2. பொது ஆண்டு 1203ல் வெட்டப்பட்ட சடையவர்மன் குலசேகரன் கல்வெட்டில், ஐயப்பொழில் ஈஸ்வரமுடையார் கோயிலில் திருப்பள்ளி அறை நாச்சியாரை செம்பியன் பல்லவரையன் எழுந்தருளிவித்து விளக்கெரிக்க நிலம் ஆவணப்படுத்திக் கொடுத்ததை துண்டுக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
3. பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில், தென்பறப்பு நாட்டு நல்லணி ஆமூர் ஐயப்பொழில் ஈசுவரமுடைய நாயனார் கோயில் சிவபிராமணர் சிலர் திருவாலத்தி எரிக்க காசு பெற்றுக் கொண்டமை குறித்தசெய்தி உள்ளது. இரண்டாவது துண்டுக் கல்வெட்டில் மலைக்குடி மலைமேல் கோல் என்ற அளவுகோலால் அளந்த நிலத்தின் எல்லைகள் சொல்லப்படுகின்றன.
4. மற்றொரு பொது ஆண்டு 13ம் நூற்றாண்டுக் கல்வெட்டு, இக்கோயிலின் கருவறை நிலைவாயிலைச் செய்வித்தவன் அழகன் அரியானான காடுவெட்டி என்று தெரிவிக்கிறது.
5. பொது ஆண்டு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டுகள், மூத்த பிள்ளையார்க்கு [விநாயகர்] திருவிளக்கு எரிப்பதற்காக அறுபது பணம் தானமாகத் தரப்பட்டமை பற்றியும் நிலவிற்பனை பற்றியும் கூறுகின்றன.
சிற்பங்கள்
விமானப் பகுதியில் பூதகணங்கள், நந்தி, முனிவர்கள், தக்ஷிணாமூர்த்தி, நாராயணர் போன்ற சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
விமானத்துடன் கூடிய கருவறை, முன்மண்டபம், திருச்சுற்று மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. கோயிலின் சில பாகங்கள் கோயில் வளாகத்தைச் சுற்றி சிதறிக் கிடக்கின்றன.
கூடுதல் விவரங்கள்
அய்யம் பொழில் ஈஸ்வரர் சன்னிதியின் இருபுறமும் விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா உடனுறை முருகன் ஆகியோர் பீடத்தின் மேல் அமர்ந்துள்ளனர். முருகனுக்கு அருகில் அம்மன் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சிவலிங்கத்தில் சதுர வடிவ ஆவுடையார் காணப்படுகிறது. சண்டிகேஸ்வரர் சன்னிதி மற்றும் நந்தி மண்டபம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தேவகோட்டங்களில் தெய்வ உருவங்கள் இல்லை. ஆனால், ஒற்றை அடுக்கு விமானத்தில் அவர்கள் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கோயில் நுழைவாயிலில் உள்ள வளைவிலும், தெய்வங்களின் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
குறிப்புகள்
மதுரை மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 1 பக்கம்-171-179.
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
திருவாதவூர் திருக்கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் திருவாதவூர் செல்லும் வழியில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆமூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மதுரையில் தங்கும் வசதி உள்ளது.
மீடியா கோப்புகள் இல்லை
No media Files