துரௌபதை அம்மன் கோயில்
Draupadhai Amman Temple
மூலவர் பெயர்
திரௌபதை அம்மன்
திருவிழாக்கள் விவரங்கள்
துரௌபதை அம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் நடைபெறும்.இவ்வூரைச் சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பூக்குழி திருவிழா நடத்துவர். கிராம மக்கள் காப்பு கட்டி விரதமிருந்து பூக்குழி இறங்குவர். ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் 26 நாட்களுக்கு திருவிழாக்கள் நடைபெறும். இதில் பீமன் கீசன், கூந்தல் விரிப்பு மற்றும் கூந்தல் முடிப்பு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பால் குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தல்.
ஊர்
மேலூர்
மாவட்டம்
மதுரை
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 15-16 ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
அம்மன், சிவன், விநாயகர், கிருஷ்ணன், பனையாடி கருப்புசாமி, கமலக்கன்னி, அரவான், நாகம்மாள் மற்றும் பிற தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
மேலூர் துரௌபதை அம்மன் கோயில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்றும், இக்கோயில் ஆற்காடு நவாப் காலத்தில் கட்டப்பட்டது என்றும், மேலூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயில் அந்நகரம் உருவாவதற்கு முன்பே கட்டப்பட்டது என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் பொது ஆண்டு 1915 ஆம் ஆண்டில் இக்கோயில் துரௌபதை அம்மனுடைய ஐம்பொன் விக்கிரகம் சதி கும்பலால் திருடப்பட்டது, என்ற செய்தி இக்கோயிலில் கல்வெட்டாக வெட்டி வைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் அடிப்படையில், பொது ஆண்டு 1915 ஆம் ஆண்டில் இக்கோயில் பூசாரியாக இருந்த, தாத்தா நாராயணன் பூசாரி என்பவர் சிலையின் விவரங்களை ஒரு பத்திரத்தில் எழுதி வைத்துள்ளார். இவர் எழுதி வைத்தக் குறிப்பின் அடிப்படையிலும், இவரது சந்ததியினரின் முயற்சியினாலும், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் முயற்சியினாலும் இவ்விக்கிரகம் பொது ஆண்டு 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது, என்று தெரிகிறது.
கோயில் அமைப்பு
கருவறை, மகா மண்டபம், முன்மண்டபம் மற்றும் சிறிய சன்னிதிகள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
கோயில் நுழைவாயிலில் சுதை சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவு காணப்படுகிறது. முன் மண்டபத்தில் பலிபீடம் மற்றும் கொடிமரம் உள்ளது. கோயில் கருவறையில் ஒரு பீடத்தின் மேல் திரௌபதி அம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது. கருவறையின் வெளியே உள்ள மண்டப பகுதியில் பல தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் திருச்சிற்றுப் பகுதியில் சிறிய மாடம் போன்ற அமைப்புகளில் விநாயகர், சிவன், கிருஷ்ணன், பனையாடி கருப்புசாமி, கமலக்கன்னி, அரவான், நாகம்மாள் மற்றும் பிற தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மேலூர் சிங்கம்மாள் கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் மேலூர்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files