சிவன் கோயில்
Shiva Temple
தலத்தின் சிறப்பு
மேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் மக்கள் இக்கோயிலில் வழிபடுகின்றனர்.
மூலவர் பெயர்
காமாட்சி அம்மன் மற்றும் கல்யாண சுந்தரேஸ்வரர்
தல மரம்
அரச மரம்
பூசைக்காலம்
தினந்தோறும் கோயில் திறக்கப்பட்டு பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சிவராத்திரி மற்றும் சிவனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
விளக்கு வைத்து வழிபடுதல்
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 முதல் 120 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
மேலூர் நகரில் சிவன் கோயில் இல்லாமல் இருந்ததால் கவுன்சிலர் ஒருவரால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு
நுழைவாயிலில் முகப்பு வளைவு மற்றும் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் முதன்மை கடவுளான கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியும், தனியாக காமாட்சி அம்மன் சன்னதியும் உள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் மதில் சுவற்றின் மேல் நந்தி, பூதகணங்கள் மற்றும் பிற தெய்வ சிலைகள் காணப்படுகின்றன. இக்கோயிலில் நுழைவாயிலுக்கு நேராக காமாட்சி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் சிறிய மாடம் போன்ற அமைப்பில் விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மேலூர் சிங்கம்மாள் கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் மேலூர்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files