பெருங்காட்டு அய்யனார் கோயில்
Perunkattu Ayyanar Temple
மூலவர் பெயர்
பெருங்காட்டு அய்யனார்
திருவிழாக்கள் விவரங்கள்
வைகாசி மாதம் திருவிழா நடைபெறும். மேலும் பங்குனி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த சமயத்தில் முருகன் இம்மலையைச் சுற்றி தேரில் ஊர்வலம் வருவார்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
திருவிழாவின் போது 1000 பால் குடம் எடுக்கப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சுவரோவியம்
ஐயனார், விநாயகர், முருகன், ரங்கநாதர், சிவன், ஆஞ்சனேயர் போன்ற ஓவியங்கள் பாறைகளின் மேல் அண்மையில் வரையப்பட்டுள்ளன.
தல வரலாறு / கதைகள்
’பெருங்காட்டு இராணுவம்’ என்று ஒரு இராணுவப் படை இங்கு இருந்துள்ளதாகவும், மலையாண்டி என்ற சித்தர் மற்றும் ஔவையார் ஆகியோர் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்றும் இப்பகுதி மக்களால் செவிவழிச் செய்திகள் கூறப்படுகின்றன.
கோயில் அமைப்பு
ஒரு திறந்தவெளி கோயில் அமைப்பு/ கூரை இல்லாக் கோயில்.
சுருக்கம்
மலை அருகில், திறந்த வெளியில் படிக்கட்டுகளுடன் கூடிய, பீடம் போன்ற அமைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பீடத்தின் மேல் அய்யனார் மற்றும் அவரது இரு புறங்களிலும் அவரது துணைவியரான பூர்ணா மற்றும் புஷ்கலா அமர்ந்துள்ளனர். இச்சிலையின் வலது பக்கம் மற்றொரு அய்யனார் சிலையும், இடது பக்கம் விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. உயரமான மற்றொரு பீடத்தின் மேல் யானை மற்றும் பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த யானை அய்யனாரை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தின் அருகில் சில சுடுமண் குதிரைகள் மற்றும் பலிபீடங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இப்பீடத்தின் அருகில் உள்ள பாறைகளில் பல தெய்வ உருவங்கள் அண்மைக்காலத்தில் வரையப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. இது குன்னங்குடி பட்டி மற்றும் சாரப்பட்டி ஆகிய இரண்டு ஊர்களுக்கும் பொதுவான கோவிலாகும்.
கூடுதல் விவரங்கள்
மலையின் மீது மலையாண்டி சாமியான முருகன் இருக்கிறார். இம்மலையை சுற்றி மிக ஆபத்தான பாம்புகள் உள்ளன. மேலும் இப்பகுதி மக்கள் அப்பாம்புகளை தெய்வமாக வணங்குகின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் இவ்வூர் மக்கள் இம்மலையைச் சுற்றி வந்த பின்னர் ஔவையார் வந்து தங்கியதாக கூறப்படும் இடத்தில் அன்னதானம் அருந்துகின்றனர். மிக வறட்சியான காலங்களிலும் இங்குள்ள குளத்தில் நீர் வற்றாமல் இருப்பது இக்குளத்தின் சிறப்பாகும்.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
குறிப்புகள்
தகவல் ஓவியர் பாண்டி
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பெருங்கருப்பு கோயில். கருங்காலக்குடி தொல்லியல் ஆய்விடம்
செல்லும் வழி
மேலூர் முதல் சிங்கம்புணரி செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files