வளையங்கருப்பு சுவாமி கோயில்
Valaiyankaruppu Swamy Temple
தல மரம்
வேப்ப மரம்
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
ஒரு திறந்தவெளி கோயில் அமைப்பு/ கூரை இல்லாக் கோயில்
கூடுதல் விவரங்கள்
ஒரு பெரிய மரத்தின் கீழ், படிக்கட்டுகளுடன் கூடிய, பீடம் போன்ற அமைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பீடத்தின் மேல் அய்யனார் மற்றும் பேச்சியம்மன் அமர்ந்துள்ளனர். இந்த, கூரை இல்லாத பீடத்தின் இடது கோடியில் நீளமான அரிவாள்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. பீடத்தின் நடுவில் அய்யனார் சிலை மற்றும் அவரது வாகனமான நாயின் சிலை காணப்படுகிறது. பீடத்தின் வலது பக்கம் பேச்சி அம்மன் சிலை காணப்படுகிறது. இங்கு காணப்படும் அய்யனார் தனது வலது கையில் அரிவாளை உயர்த்திப் பிடித்தவாரும், இடது கையை கதையின் மீது ஊன்றியவாரும் காட்சியளிக்கிறார்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அரிட்டாபட்டி குடைவரை கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் மேலூர் செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files