கொட்டாகுடி கருப்பசாமி கோயில்
Kottakudi Karuppasami Temple
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
கருப்பசாமி மற்றும் கஜலட்சுமி
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் முகமண்டப அமைப்பையுடைய, அண்மைக்காலக் கோயில் கட்டிடம்.
கூடுதல் விவரங்கள்
கருவறையில் முதன்மைக் கடவுளான கருப்புசாமியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. கருவறையில் பீடத்தின் மேல் நிற்கும் கருப்புசாமி, முறுக்கு மீசையுடன் கையில் அரிவாள் மற்றும் சிலம்பம் பிடித்தபடி நின்றுள்ளார். இக்கோயில் முகம் மண்டபம் கருவறையை விட அகலமாகக் காணப்படுகிறது. இம்முக மண்டபத்தில் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இக்கோயிலின் அருகில் பெரிய அரச மரம் ஒன்று காணப்படுகிறது. அவ்வரச மரத்தின் கீழ் இரண்டு யானைகள் வழிபடும் கஜலட்சுமி சிற்பப் பலகையும் கல்லால் ஆன தொட்டி ஒன்றும் காணப்படுகின்றன.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அரிட்டாபட்டி குடைவரை கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் மேலூர் செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files