பத்திரகாளி அம்மன் கோயில்
Bhadrakali Amman Temple
மூலவர் பெயர்
பத்திரகாளியம்மன்
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் நாள்தோறும் விளக்குப் பூசை நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பக்தர்கள் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர். கிடாய் வெட்டுதல் நடைபெறும்.
ஊர்
அம்பாத்துறை
மாவட்டம்
திண்டுக்கல்
காலம்/ ஆட்சியர்
இப்போது காணப்படும் கட்டடம் பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது
கல்வெட்டு / செப்பேடு
இங்குப் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில், தமிழில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
சுவரோவியம்
பதினெட்டுக் கைகளை உடைய துர்க்கை சிம்ம வாகனத்தில் அமர்ந்தவாறு அசுரர்களை வீழ்த்தும் காட்சி ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
திருச்சுற்றுப் பகுதியில் சக்தி விநாயகர், நந்திகேஸ்வரர், பாலமுருகன், விஷ்ணு, துர்க்கை, நவக்கிரகம், தட்சிணாமூர்த்தி ஆகியோர் தனி மண்டபங்களில் உள்ளனர்.
தல வரலாறு / கதைகள்
இக்கோயில் தல வரலாற்றின்படி, பொது ஆண்டு 7ஆம் நூற்றாண்டில் கூன் பாண்டியன் என்ற நின்றசீர் நெடுமாற பாண்டியன் தொழுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தஞ்சையிலிருந்து வரும் வழியில் வனப் பகுதியிலிருந்த ஒரு காளி கோயிலில் வழிபட்டுவிட்டு வரும் பொழுது, முனிவர் ஒருவர் கூறிய அறிவுரைக்கு இணங்க அம்பாத்துறைக்குச் சென்றார். அம்பாத்துறையிலும் அதனைச் சுற்றியுள்ள நடுப்பட்டி, பெருமாள் கோயில்பட்டி, சம்புத்துறை, பெருமாள் ஊத்துப்பட்டி, கீழக்கோட்டை ஆகிய ஊர்களில் 108 கிணறுகளை வெட்டினார். அக்கிணறுகளிலிருந்து தவளை விழாத தண்ணீரை எடுத்து வந்து அம்பாத்துறை காளி கோயிலுக்குப் பூசை செய்தார். அதன் பிறகு அவருக்கு நோய் நீங்கியதாகக் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு
கோயில் நுழைவாயிலில் ராஜகோபுரம் காணப்படுகிறது. முன் மண்டபத்தின் மேல் ஓட்டுக்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கால பைரவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
சுருக்கம்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டில் விசுவநாத நாயக்கரால் நிறுவப்பட்ட 72 பாளையங்களுள் அம்பாத்துறையும் ஒரு பாளையமாக இருந்துள்ளது. கூன் பாண்டியனால் வழிபடப்பட்ட காளி கோயில் பாளையக்காரர்களால் விரித்துக்கட்டப்பட்டுப் பின் சமீன் காலத்தில் முற்றிலும் பிரித்து மாற்றிக் கட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
அருள்மிகு பத்திரகாளியம்மன் மீனாட்சியம்மன் திருக்கோயிலில் கிழக்குத் திசை நோக்கியுள்ள கோயில் கருவறையில் பத்ரகாளியம்மன் மற்றும் மீனாட்சியம்மன் மூலவர்களாக உள்ளனர். கருவறையின் வெளியில் வலப்புறம் பத்திரகாளியம்மனும் இடப்புறம் மீனாட்சியம்மனும் உற்சவர்களாக உள்ளனர். கருவறையின் நுழைவாயில் மேல்பகுதியில் கஜலட்சுமியின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இவ்வூருக்குள் நுழையுமிடத்திற்கு அருகே கல் கட்டுமானத்துடன் காணப்படும் கிணறு, 'பாண்டியன் கிணறு' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும், இக்கிணற்றுக்கு அருகில் உள்ள கோயிலில் முப்பட்டைக் குமுதப் பகுதியில், பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் தமிழில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இத்துண்டுக் கல்வெட்டில் சிவன் கோயில் ஒன்றுக்குத் தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் பற்றிய குறிப்பு மட்டும் காணப்படுகிறது. இங்குள்ள காட்டுமாரியம்மன் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவில் பூக்குழி (தீமிதி) இறங்குதல் சுற்று வட்டாரங்களில் மிகவும் பெயர்பெற்ற ஒரு விழாவாகும்.
தகவல்
க.த.காந்திராஜன்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files