Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

கோட்டை மாரியம்மன் கோயில்

Kottai Mariamman Temple

அமைவிடம்

மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

குறிப்பிட்ட நாட்களில் சூரியனுடைய கதிர்கள் அம்மனின் முகத்தில் விழுகின்றன. விழாக் காலங்களில் தசாவதாரக் கோலம் மற்றும் சயனக் கோலத்தில் அம்மன் காட்சியளிக்கிறார்.


மூலவர் பெயர்

கோட்டை மாரியம்மன்


ஊர்

மாவட்டம்

திண்டுக்கல்

தல மரம்
வேப்பமரம்
கோயில் குளம்/ஆறு
கோட்டைக் கேணித்தீர்த்தம்
பூசைக்காலம்
நாள்தோறும் மூன்று காலப் பூசை நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை மாதப்பிறப்பு விழா, வைகாசி பஞ்சப்பிரகார உற்சவம், ஆனித் திருமஞ்சனம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்புப் பூசைகள், நவராத்திரி 11 நாட்கள் கொலு உற்சவம், கார்த்திகை மாதத்தில் 108 சங்காபிஷேகம், மார்கழி மாதத்தில் நாள்தோறும் திருவிளக்குப் பூசை ஆகியவை நடைபெறுகின்றன. இந்நாட்களில் தங்கரத ஊர்வலம், சிம்ம வாகன வீதி உலா, ரிஷப வாகன உலா, புஷ்பப் பல்லக்கில் வீதி உலா ஆகிய வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஆண்களும், பெண்களும் தீச்சட்டி தாங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 ஆண்டுகள் பழைமையான கோவிலாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
இது திப்பு சுல்தானின் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட ஆலயமாக இப்பகுதி மக்களால் கருதப்படுகிறது. இக்கோயில் மலைக்கோட்டையின் கிழக்குப் பக்கம் அமைந்திருப்பதால் இவ்வம்மனுக்குக் 'கோட்டை மாரியம்மன்' என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் இந்த அம்மனைப் போர் வீரர்கள் தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டுள்ளனர்.
கோயில் அமைப்பு
இக்கோயிலின் நுழைவாயிலில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் சிறிய கருவறை, கொடிமரம், அலங்கார மண்டபம் மற்றும் பிற சந்நிதிகள் அமைந்துள்ளன.
சுருக்கம்
விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் இந்த அம்மனைப் போர் வீரர்கள் தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டுள்ளனர். வேறு மாநிலங்களுக்கு யாத்திரையாகச் செல்பவர்களும் இவரை வணங்குகின்றனர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லைக் காவல் தெய்வமாக உள்ளார்.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் கருவறையில் பீடத்தின் மேல் கோட்டை மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இவருக்கு எட்டுக் கைகள் உள்ளன. தன் வலக்கைகளில் பாம்புடன் கூடிய உடுக்கை, கத்தி, வேல் மற்றும் சூலாயுதம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். தன் இடக்கைகளில் அரிவாள், வில், மணி மற்றும் கிண்ணம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். இச்சிலையின் பின்புறத்தில் ஒரு துளை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய நாட்களிலும் அக்டோபர் மாதம் 2, 3, 4ஆகிய நாட்களிலும் காலை 6:20 மணி முதல் 6:40 மணி வரை சூரியனுடைய கதிர்கள் அம்மனின் முகத்தில் விழுகின்றன. இந்நிகழ்வைச் சூரிய பகவான் அம்மனை வழிபடும் காட்சியாகப் பக்தர்கள் கருதுகின்றனர். 'கோட்டை மாரியம்மன்' கோயில் திருவிழாவில் மேள தாளங்கள் முழங்க ஆண்களும், பெண்களும் தீச்சட்டி தாங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது இந்தத் திருவிழாவின் முக்கியமான நிகழ்ச்சியாகும். இக்கோயிலின் விழாக் காலங்களில் அம்மன் தசாவதாரக் கோலம் மற்றும் சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
தகவல்

க.த.காந்திராஜன்

குறிப்புகள்
திருக்கோயில்கள் வழிகாட்டி- திண்டுக்கல் மாவட்டம், பக்கம் 19. https://temple.dinamalar.com/new.php?id=789 https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32151
செல்லும் வழி
மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திண்டுக்கல் தொடர்வண்டி நிலையம், 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
தங்கும் வசதி
கோயில் அருகில் தனியார் விடுதிகள் உள்ளன.

மீடியா கோப்புகள் இல்லை

No media Files