பளிச்சியம்மன் கோயில் (மலைவாழ் பளியர் மக்கள்)
Palichiamman temple (Hill tribes)
பூசைக்காலம்
எப்போதும் திறந்திருக்கும் கோயில்.
கோயில் அமைப்பு
இக்கோயிலின் முன் சிறு குடில் போன்ற அமைப்பு உள்ளது.
கூடுதல் விவரங்கள்
பளிச்சியம்மன் கோயில் ஒரு பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் படிகளுடன் கூடிய ஒரு சிறிய கருவறை அமைப்பு காணப்படுகிறது. கீழ்ப்படி நீளமாகவும் மேல்படி குறுகலாகவும் அமைக்கப்பட்டுள்ளது. முதன்மைக் கடவுளான பளிச்சியம்மன் புடைப்புச் சிற்பமாகத் தாய்ப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளார். இந்தப் புடைப்புச் சிற்பத்தில் பளிச்சியம்மனின் முகம், தலையலங்காரம், ஐந்து தலை நாகம் ஆகியன காணப்படுகின்றன. மேலும் இந்தக் கோயிலுக்கு மிக அருகில் கல்திட்டை எனப்படும் ஒரு பெருங்கற்காலச் சின்னமும் காணப்படுகிறது. எனவே இது பல நூறு ஆண்டுகளாகத் தொடர் வழிபாட்டில் இருந்துள்ள கோவிலாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
தகவல்
முனைவர் முத்தையா
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கல்திட்டை
செல்லும் வழி
தாண்டிக்குடி வழியாகச் செல்லலாம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files