வெற்றி வேலப்பர் கோயில்
Vetri Velappar Temple
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஒவ்வோர் ஆண்டும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. கோயில் தேரில் வெற்றி வேலப்பர் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
சிற்பங்கள்
நாகர், காலபைரவர், கண்ணப்பர், விநாயகர், சிவன், விஷ்ணு, பிரம்மா, நந்தி ஆகிய உருவங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் முதன்மைத் தெய்வமான வெற்றி வேலப்பர் சந்நிதியும் மற்றொரு சிறிய சிவன் சந்நிதியும் காணப்படுகின்றன. கோயிலின் கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றார்.
கூடுதல் விவரங்கள்
வெற்றி வேலப்பர் கோயில் கருவறை முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் மேல் ஒற்றை அடுக்கு விமானம் காணப்படுகிறது. தேவகோட்டத்தில் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயிலின் முன் மண்டபப் பகுதி இப்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சிவன் சந்நிதியின் வெளிப்புறம் விநாயகர், நாகர், நந்தி, துவாரபாலகர், பாவை சிலைகள் காணப்படுகின்றன. இந்தச் சந்நிதியின் நுழைவாயிலுக்கு மேல் கஜலட்சுமியின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இச்சந்நிதியின் உள்ளே சிவலிங்கத்தின் இருபுறமும் ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது. வலப்பக்கம் கடம்பன் சிற்பம் காணப்படுகிறது. இடப்பக்கமுள்ள சிற்பம் இடும்பன் என்றழைக்கப்படும் தெய்வமாகும். கோயிலின் வெளிப்புறம் அமைந்துள்ள மண்டபத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா சிலைகள் உள்ளன. கோயிலின் வெளிப்புறம் வடக்குத் திசையில் விநாயகர் அமர்ந்துள்ளார்.
காலம்/ ஆட்சியர்
பிற்காலப் பாண்டியர் காலம்
தல வரலாறு / கதைகள்
’வெற்றி வேலப்பர்' என்றழைக்கப்படும் முருகன் ஒரு கொடிய அசுரனை வென்ற பிறகு இக்கோயிலின் வெளிப்புறம் அமைந்துள்ள மண்டபத்தில், மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் சிலைகளை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இந்தக் கோயிலுக்கு 'வெற்றி வேலப்பர் கோயில்' என்று பெயர் வந்ததாகவும் செவிவழி வரலாறு உள்ளது. மேலும் இக்கோயில் கூன் பாண்டியன் காலத்தில் சீரமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
தகவல்
க.த.காந்திராஜன்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files