Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

வைரவன் கோயில்

Vairavan Temple

கோயிலின் வேறு பெயர்

வளரொளிநாதர்


பிற தெய்வத்தின் பெயர்கள்

வடிவுடை அம்பாள்


தலத்தின் சிறப்பு

இக்கோயிலில் அழகிய சிற்பங்களில், சிற்ப கலையின் வளர்ச்சியைக் காண முடிகிறது. இத்தளத்தில் பைரவரே பிரதானமான தெய்வமாக வணங்கப்படுகிறார்.


ஊர்

வைரவன்பட்டி

மாவட்டம்

சிவகங்கை

மூலவர் பெயர்
வைரவன் சுவாமி
தல மரம்
ஏர் / அழிஞ்சி மரங்கள்
கோயில் குளம்/ஆறு
வைரவர் தீர்த்தம்
திருவிழாக்கள் விவரங்கள்
சம்பக சூர சஷ்டி, பிள்ளையார் நோன்பு உள்ளிட்ட முக்கியத் திருவிழாக்கள் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாற்றிப் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் உடைந்த நிலையில் உள்ள கற்பலகைகளில் பொது ஆண்டு 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில் மன்னன் சடாவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் இக்கோவிலுக்காக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் வழங்கப்பட்ட காசுகளைச் 'சோழியனார் பழங்காசு’ என்று இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சுவரோவியம்
கோயில் தொடர்பான புராணம் கதை ஓவியங்கள், பிரகாரம் மற்றும் உட்கூரைச் சுவரில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
சிற்பங்கள்
மகாமண்டபத்தின் முன் வாயிலில் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கிழக்கு கோபுரம் 60.9'’ உயரம் உடையதாக உள்ளது. மேலும், கோட்டத்தில் ராமர் ஆஞ்சநேயருக்கு நன்றி கூறி, அவரை வணங்கும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் தனிச்சன்னதில் பைரவரும், தட்சிணாமூர்த்தி மற்றும் நந்தி தனித்துவமான இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளனர். சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், ஆறுமுகப் பெருமான், வள்ளி மற்றும் சரஸ்வதி போன்ற தெய்வங்கள் இங்கு தனிச் சன்னதியில் வணங்கப்படுகின்றனர்.
சுருக்கம்
இத்தலம் முந்தைய காலத்தில் "வடுகநாதபுரம்" என அழைக்கப்பட்டது. இக்கோயிலின் பிரதான தெய்வமாக வைரவன் சுவாமி என்றழைக்கப்படும் வளரொளிநாதரும், அவரின் துணைவியார் வடிவுடை அம்பாளும் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலின் தல விநாயகர், வளரொளி விநாயகர் ஆவார். இக்கோயிலின் தல மரங்கள் ஏர் மற்றும் அழிஞ்சி மரங்கள் ஆகும். வைரவர் தீர்த்தம் என அழைக்கப்படும் தல தீர்த்தம் இக்கோயிலின் முக்கிய அம்சமாக உள்ளது. சம்பக சூர சஷ்டி, பிள்ளையார் நோம்பு உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் வைரவன் என்ற பெயரில் பைரவர் ரூபத்தில் சிவன் எழுந்தருளியுள்ளார். கருவறையில் சிவபெருமான் தன் வாகனமான நாயுடன் காட்சி தருகிறார். கோயிலின் மண்டபங்களில் அழகிய சிற்பங்கள் மற்றும் வண்ண ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்தின் முன் வாயிலிலிருந்து தொடர்ச்சியாகக் காணப்படும் சிற்பங்கள், அக்கால சிற்பக்கலை வளர்ச்சியின் அடையாளமாக உள்ளது. வைரவன்பட்டி வைரவன் கோயில், சைவத் திருக்கோயில்களின் பாரம்பரியத்தை உணர்த்தும் ஒரு முக்கிய தலமாகும். வரலாறு, ஆன்மிகம், மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக இந்த கோயில் விளங்குகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 11ஆம் நூற்றாண்டு
தல வரலாறு / கதைகள்
கடந்த காலத்தில் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்ற அசுரர்களின் கொடுமையால் துன்புற்ற தேவர்கள், சிவனின் ஆலோசனைப்படி வளரொளிநாதரை வணங்க வந்தனர். அப்போது சிவனே அவ்விடத்தில் ஒளி வடிவில் தோன்றி, பின்னர் அங்கேயே மலையாகிவிட்டதாக தல வரலாற்றில் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியே ’வளரொளிநாதர்’ என்னும் பெயருக்கான அடிப்படையாகும். பிரம்மா மற்றும் விஷ்ணுவிடையே நடந்த ’யார் மிகவும் சக்தி வாய்ந்தவர்’ என்ற வாக்குவாதத்தில் அவர்களது அகந்தையை அடக்க, சுவாமி பைரவர் வடிவத்தை எடுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
தகவல்

க.த.காந்திராஜன்

குறிப்புகள்
சிவகங்கை மாவட்டம் தொல்லியல் கையேடு பக்கம் - 46 https://temple.dinamalar.com/new.php?id=327
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் ஒன்றும் இவ்விடத்தில் உள்ளது.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
காரைக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
காரைக்குடி

மீடியா கோப்புகள் இல்லை

No media Files