ஸ்ரீ மருதப்ப ஐயனார் திருக்கோயில்
Marudappa Ayyanar Temple
தல மரம்
கொன்னை மரம் / கொன்றை மரம்
கோயில் குளம்/ஆறு
சேங்கை ஊரணி
பூசைக்காலம்
மூன்று காலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி மாதம் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
அசைவம் மற்றும் சைவப் படையல்
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
கோயில் நுழைவாயிலில் பிரம்மாண்டமான யானையும் இரண்டு பூதகணங்களும் தனித்தனியே பெரிய பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளன. தலையில் ஒளிவட்டம் அணிந்துள்ள பூதகணங்கள், தங்கள் ஒரு கையில் வாளும் இன்னொரு கையில் கதையும் ஏந்தியபடி நிற்கின்றனர். கோயில் நுழைவாயிலில் சுதைச் சிற்பங்களுடன் கூடிய முகப்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. ஐயனார் சந்நிதியின் முகப்பிலும் பூதகணங்கள், விநாயகர், சிவன், திருமால், முருகன் போன்ற பல சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
மருதப்ப ஐயனார் மேலவாணியங்குடியின் காவல் தெய்வமாக உள்ளார். மருதப்ப ஐயனாரை இப்பகுதி மக்கள், மிக சக்திவாய்ந்த தெய்வமாகவும் கள்வர்களைக் காவு வாங்கும் தெய்வமாகவும் கருதுகின்றனர். குற்றம் செய்தவர்கள் பொய் சொல்லித் தப்பிக்க நினைத்தால் ஒரே வாரத்தில் அவர்களுக்குக் கை / கால் முடங்கிவிடுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இது பெரிய வழக்குகளை எளிதில் முடித்துக் காட்டும் தெய்வமாகவும் சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
கோயில் நுழைவாயிலில் பிரம்மாண்டமான யானையும் இரண்டு பூதகணங்களும் தனித்தனியே பெரிய பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் நுழைவாயிலில் சுதைச் சிற்பங்களுடன் கூடிய முகப்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள்
கோயிலுக்குள் நுழைந்தவுடன் இடப் பக்கம் காணப்படும் பூதகணத்தின் பின்புறம் அமைந்துள்ள சிறிய சந்நிதியில், பெரிய கருப்பு சாமியும் கொன்னையடி கருப்பு சாமியும் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். ஐயனார் சந்நிதியின் முன்பு பல உலோகமணிகள் மாட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறிய சந்நிதியும் மருதப்ப ஐயனாரின் பெரிய சந்நிதியையும் சுற்றி வரிசையாகப் பல தெய்வச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை ராக்காயி அம்மன், பேச்சியம்மன், காளியம்மன், சமயக் கருப்பு, அக்கினி வீரபத்திரர், அகோரவீரபத்திரர், ஆதி கணக்கர், ஆதி பூசாரி வேளாளர், தட்சணாமூர்த்தி, முனியப்ப சுவாமி, நாக தேவதைகள், அதி தெய்வங்கள் ஆகியவை ஆகும். இச்சிற்பங்கள் மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் நீளமான அரிவாள்கள் காணப்படுகின்றன. கோயில் வளாகத்தில் உள்ள மரத்தின் மேல் தொட்டில் மற்றும் முடிப்பு போன்றவை கட்டப்பட்டு வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன.
தகவல்
முனைவர் முனீஸ்வரன்
செல்லும் வழி
சிவகங்கை -மேல வானியங்குடி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேல வாணியங்குடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
சிவகங்கை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files