சேவகபெருமாள் ஐயனார் கோயில்
Sevaga Perumal Ayyanar Temple
பிற தெய்வத்தின் பெயர்கள்
செவிட்டு ஐயனார், வல்லடிகாரர், நொண்டி கருப்பன்
தலத்தின் சிறப்பு
இக்கோயில் ஐயனார், கேட்டதைக் கொடுப்பதில் வல்லவராகவும். ஊரைக்காப்பவராகவும், நெல் விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் போற்றப்படுகிறார். சனி தோஷம், ராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடுகின்றனர்.
ஊர்
சிங்கம்புணரி
மாவட்டம்
சிவகங்கை
மூலவர் பெயர்
சேவகப் பெருமாள் ஐயனார்
தல மரம்
வில்வம்
கோயில் குளம்/ஆறு
புஷ்கரிணி, விரிசிலை ஆறு, ஆலய உட்பிரகாரத்தில் உள்ள வற்றாக்கிணறு.
பூசைக்காலம்
ஆறு காலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகாசி மாதம் தேர்த் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேங்காய் உடைத்தும் ஐயனாருக்கு அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
வேண்டுதல் நிறைவேறியதும் மாடுகள் நேர்த்திக்கடனாகச் செலுத்தப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
தொன்று தொட்டு வழிபடப்பட்டு வரும் கோயில்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது. பண்டைய சோழ, பாண்டிய நாடுகளின் எல்லை நகரமாக விளங்கிய சிங்கம்புணரியில் அமைந்துள்ள இக்கோயில் சைவமும், வைணவமும் சங்கமிக்கும் தலமாக உள்ளது. இப்பகுதியில் சோழர் மற்றும் பாண்டியருக்கு இடையே நடந்த போருக்குப் பின்னர் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில், இக்கோயில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பல காலங்களுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பி ஓடிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனைப் பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஓர் ஐயனார் சிலையைக் கண்டார். வியப்படைந்த வேடுவன், "பெருமாளே! மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்குச் சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்," என்று வணங்கினான். அன்று முதல் இவர், "சேவுகப்பெருமாள் ஐயனார்' என்ற பெயரில் இவ்விடத்தில் காவல்தெய்வமாக அருளுகிறார்.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் சிங்கம்பிடாரி அம்மன், சேவுகப்பெருமாள் ஐயனார், தான்தோன்றீசுவரர், அடைக்கலம் காத்த ஐயனார், பிரகாரத்தில் கன்னிமூலக் கணபதி, வள்ளி தெய்வானை உடன் முருகன், பரிவாரத் தேவதைகள், கருப்பண்ணசாமி, கருப்பர், சப்தகன்னியர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். நவக்கிரகங்களுக்கும் தனிச் சந்நிதி அமைந்துள்ளது.
கூடுதல் விவரங்கள்
இத்தலத்து ஐயனார், ஒரு காலைத் தொங்கவிட்டபடியும் மற்றொரு காலை அதன்மீது படுக்கக்கிடத்தியும் (வீராசனத்தில்) அமர்ந்துள்ளார். இவர் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். ஐயனாருக்கு வலப்புறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடப்புறம் பூவைவல்லி உடன் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் தான்தோன்றீஸ்வரர் தனித்தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர். பிரமோற்சவ விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தேர் நிலையை வந்தடைந்ததும் பக்தர்கள் தேங்காய்களைத் தேரடிப் படிக்கட்டுகளில் வீசி உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இக்கோயிலில் காணப்படும் தனித்துவமான வழக்கமாகும்.
தகவல்
முனைவர் முனீஸ்வரன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அருகில் அரச மரப் பிள்ளையார் கோயில் உட்படப் பல சிறிய கோயில்கள் உள்ளன
செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிங்கம்புணரி பேருந்து நிலையம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files