Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

பொய்கைக்கரைப்பட்டி வரலாறு

ஊரின் வரலாற்றுப் பெயர்

பொய்கைக்கரைப்பட்டி


பெயர்க் காரணம்

பொய்கை என்பது இயற்கையாக அமையப் பெற்ற நீர்நிலையைக் குறிக்கும். அழகர் மலையில் இருந்து வரும் உபரி நீரின் காரணமாக உருவான பொய்கைக் கரையில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. ஆகையால், இது பொய்கைக்கரைப்பட்டி எனப் பெயர் பெற்றது.


ஊர் வரலாறு

அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள தெப்பக்குளம் திருமலை நாயக்கரால் அமைக்கப்பட்டது. பொய்கையைப் பாதுகாக்கும் நோக்கில் திருமலை நாயக்கர் தெப்பம் அமைத்துள்ளார். பொய்கரைப்பட்டியில், பொது ஆண்டு 13-15 ஆம் நூற்றாண்டுகளில், அழகர் கோயிலுக்குரிய நந்தவனங்களும் பொய்கையும் உருவாக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று மஞ்சக்குடியைச் சேர்ந்த உய்ய வந்தான் திருநோக்க கலியானான தொண்டைமானார் என்பவராலும், மற்றொன்று இராயூரைச் சேர்ந்த தெற்காழ்வார் என்பவராலும், 'ஆத்திரையன் திரு நந்தவனம்' என்ற பெயரில் மற்றொரு நந்தவனம் நல்லம வீதி ராஜ தேவர் என்பவராலும் உருவாக்கப்பட்டது. பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டளவில் வேம்பற்றூரைச் சேர்ந்த சுந்தரத் தோளந் என்பவர் ஆசிரியம் (அடைக்கலப் பாதுகாப்பு) அமைத்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டு ஒன்று இவ்வூரிலுள்ளது.


ஊர்

பொய்கைக்கரைப்பட்டி

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தில் சித்திரைத் திருவிழாவின்போது, கள்ளழகர் புறப்பட்டு மதுரைக்குச் செல்வதற்கு முன் இந்தப் பொய்கையை ஐந்து முறை சுற்றி வருவது வழக்கம். இது ஒருநாள் திருவிழாவாக நடைபெறும். மறுநாள் கள்ளழகர் மதுரைக்குக் கிளம்புமுன், அந்த ஊரின் காவல் தெய்வங்களுக்குப் பழம் போடும் நிகழ்வை முடித்துக்கொண்டு விடைபெறுகிறார்.
தகவல்

முனைவர் துர்கா தேவி

புகைப்படங்கள்

அ.ஸ்வீட்டி

அ.ஸ்வீட்டி