Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

வஞ்சிநகரம் வரலாறு

ஊரின் வரலாற்றுப் பெயர்

வஞ்சிநகரம்


பெயர்க் காரணம்

சோழ நாட்டின் இளவரசி வஞ்சிக்கொடி தீகுளித்து இறந்த இடம், அவர் பெயரால், வஞ்சிநகரம் என்று அழைக்கப்படுகிறது.


வீடுகளின் எண்ணிக்கை

500


ஊர்

வஞ்சிநகரம்

மாவட்டம்

மதுரை

ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை
5
ஊர் வரலாறு

சோழ நாட்டு இளவரசியான வஞ்சிக்கொடிக்கு பாண்டிய நாட்டில் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. திருமண ஏற்பாடு நடைபெறும் போது சில காரணங்களால் (இயற்கை பேரிடலோ அல்லது போரினாலோ) இளவரசியை உடனடியாக பாண்டிய நாட்டில் எப்படியாவது பத்திரமாக கொண்டுசேர்க்க வேண்டுமென மன்னர் தீர்மானிக்கிறார். பாண்டிய நாட்டிற்கும் தகவல் அளித்த பின்னர் சில வீரர்களுடன் இளவரசியை பாண்டிய நாட்டிற்கு அனுப்பிவைக்கிறார். தற்போது வஞ்சிநகரம் என்றழைக்கப்படும் இடத்தில், ’விடங்காய் கம்மாய்’ என்ற கண்மாய் வழியாகச் செல்லும் பொழுது விடங்கன் என்ற ஒருவன் இளவரசியை தவறான நோக்கத்துடன் அனுகியதால், இளவரசி அங்கிருந்து தப்பித்து சென்று, தற்போது கோயில் இருக்கும் இடத்தில் உள்ள குளத்தில் தீக்குளிக்க முற்படுகிறார். தகவலறிந்த பாண்டிய மன்னர் எதிர் திசையிலிருந்து இளவரசியை அழைத்துச் செல்லும் நோக்குடன் வருகிறார். அப்போது இளவரசி ’என்னை அழைத்து வந்த படைவீரர்கள் அனைவரும் இவ்விடத்தில் என்னை வழிபடவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டு தீக்குளிக்கிறார். அவரது கோரிக்கையின் பேரில் அவ்விடத்தில் கோவிலமைக்கப்பட்டு, இளவரசி வஞ்சிக்கொடி அங்கு வஞ்சியம்மனாக வழிபடப்படுகிறார் என்பது செவிவழி வரலாறாகும்.

கூடுதல் விவரங்கள்

இந்நிகழ்விற்கு பிறகு ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட மாதம் மற்றும் தேதியில் ஆடி பூசை முருகனுக்கும், கிடா சிறப்பு கருப்பனுக்கு என்று திருவிழாக்கள் நடைபெறுகிறது.

தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

புகைப்படங்கள்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

கேட்பொலி

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்