பிரிவுகள்
Divisions
நாட்டுப்புறப்பாடல்கள்
தாலாட்டுப் பாடல்
நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் கோயில் திருவிழாக்களில் பாடும் வழிபாட்டுப் பாடல்கள், இறந்தவர் வீடுகளில் பாடும் ஒப்பாரிப் பாடல்கள், வயலில் வேலை செய்யும்போது ஓரிசைவுக்காகவும் வேலையின் களைப்பு தெரியாமல் இருக்கவும் பாடும் கதிர் அறுத்தல் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், பொழுதுபோக்குப் பாடல்கள் ஆகியவை நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும். இப்பாடல்கள் பெரும்பாலும் எழுதி வைத்துப் பாடப்படுவன அல்ல. வழிவழியாகத் தங்கள் முன்னோர்களிடம் இருந்து இப்பாடல்களை இவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பாடல்கள் இவ்வூர் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதியாக உள்ளன. தாலாட்டுப் பாடல்கள் குழந்தைகளின் அழுகையை நிறுத்துவதற்காகவும் குழந்தைகளை உறங்க வைப்பதற்காகவும் இயற்றப்பட்ட, இனிமையான இசை உடைய பாடல்களாகும். இந்தப் பாடலைப் பாடிய பெண்மணி உள்ளூர்த் திருவிழாக் காலங்களில் பாடுவது மட்டுமல்லாமல் அருகில் உள்ள ஊர்களுக்கும் வெளி ஊர்களுக்கும் சென்று பல வகையான பாடல்களைப் பாடுவதாகக் கூறுகின்றனர்.
வாடிப்பட்டி