பிரிவுகள்
Divisions
அனைத்து பிரிவுகளும்
All sections
ஓவியங்கள்
முறுக்கோடை பாறை ஓவியம்
மொட்டப்பாறை என்ற மலையில் 3 மீட்டர் அகலம் மற்றும் 2 மீட்டர் உயரம் கொண்ட பாறை ஓவியம் காணப்படுகிறது. இப்பாறையில் மூன்று காலக்கட்டங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. முதலில் சிவப்பு நிறத்திலும் பின்பு வெள்ளை நிறத்திலும் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. இவற்றில் இரத்தச் சிவப்பில் வரையப்பட்ட ஓவியங்களின் உடைய உருவ அமைப்பைச் சரிவர அறிய முடியவில்லை. இதற்கு அடுத்துச் சற்று மங்கிய வெள்ளை நிறத்தில் மனித உருவங்கள் நின்ற நிலையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
ஆண்டிப்பட்டி